தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு செய்வதில் கடும் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக சென்னையில் திமுக கூட்டணி வலுவாக இருப்பதால், பல தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. ஆனால், பாஜகவைத் தவிர மற்ற கூட்டணிக் கட்சிகளான பாமக, தமாகா போன்றவை சென்னையில் தொகுதிகள் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளன.
பாஜக தரப்பில் வேளச்சேரி, மயிலாப்பூர், விருகம்பாக்கம், துறைமுகம் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகள் கேட்கப்படுவதாகத் தெரிகிறது. இருப்பினும், அதிமுக தலைமை துறைமுகம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய இரண்டு தொகுதிகளை மட்டுமே பாஜகவிற்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது கூட்டணிக் கட்சிகளிடையே ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளில் தங்களது செல்வாக்கை நிலைநாட்ட அதிமுக விரும்புவதால், குறிப்பிட்ட சில தொகுதிகளை மட்டும் பாஜகவிற்குத் தர முன்வந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள் வரும் நாட்களில் பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யப்படுமா அல்லது கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்…
லக்னோவில் உள்ள ககோரி காவல் எல்லைக்குட்பட்ட செம்ராமு கிராமத்தில், பிரேமா யாதவ் என்பவர் புதன்கிழமை இரவு கொடூரமான முறையில் கொலை…
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், தமிழக அரசியல் மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பல சுவாரஸ்யமான கருத்துகளைத்…
வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை…
விசியநகரம் மாவட்டம், காரிவிடி மண்டலம், கண்டிபேட்டை கிராமத்தில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ராமுலம்மா…
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு அப்பகுதி மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…