விசியநகரம் மாவட்டம், காரிவிடி மண்டலம், கண்டிபேட்டை கிராமத்தில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ராமுலம்மா என்ற பெண், தனது தாய்வழி உறவினர் சீனு என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே சீனுவும் தனது மனைவியைப் பிரிந்து வாழ்பவர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒருநாள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராமுலம்மா, சீனுவின் மண்டையில் இரும்பு கம்பியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் மீது ஆசிட்டையும் ஊற்றியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சீனு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது கள்ளக்காதலனைக் கொன்ற பிறகு, குற்றவுணர்ச்சியிலும் பயத்திலும் ராமுலம்மா பயிர் நாசகாரப் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட உள்ளூர் மக்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…