கள்ளக்காதல் விபரீதம்..! பழைய காதலால் வந்த வினை… பெண் போலீசுக்கு இன்ஸ்பெக்டர் கொடுத்த பாலியல் டார்ச்சர்… அதிரடி நடவடிக்கை…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

சென்னையில் நடைபெற்ற காவலர் குறைதீர்ப்பு முகாமில், 37 வயதான பெண் காவலர் ஒருவர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தியாகராய நகர் சரகத்தில் பணியாற்றிய போது, அந்த இன்ஸ்பெக்டருடன் தனக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் தனது தவற்றை உணர்ந்துகொண்ட அப்பெண், தனது கணவருடன் வாழ்வதற்காக அந்த ரகசிய உறவை முற்றிலும் துண்டித்துவிட்டார்.

ஆனால், உறவை முறித்துக்கொண்ட பின்னரும் அந்த இன்ஸ்பெக்டர் தன்னிடம் உள்ள நெருக்கமான புகைப்படங்களைக் காட்டி மிரட்டி, தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக அப்பெண் காவலர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தொடர் மிரட்டலில் இருந்து தன்னை மீட்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காவல் ஆணையர் அமல்ராஜ், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தலைமையிலான விசாகா கமிட்டியின் தீவிர விசாரணைக்கு இந்த வழக்கை உடனடியாகப் பரிந்துரைத்துள்ளார்.