நள்ளிரவில் வீட்டைத் தேடி வந்த எமன்… தரையில் தூங்கிய +2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… உயிரைப் பறித்த நச்சுப் பாம்பு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

சென்னை எண்ணூர் அருகேயுள்ள எர்ணாவூர், ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாபுவின் 16 வயது மகள் யாஷினி. 12-ஆம் வகுப்பு பயின்று வந்த இம்மாணவியின் குடும்பத்தினர், தங்களது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டி வருவதால், அருகாமையில் உள்ள ஒரு சிறிய ஓட்டு வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்தனர். அந்த வீட்டின் சுற்றுப்புறத்தில் புதர்கள் அதிகளவில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தரையில் உறங்கிக்கொண்டிருந்த மாணவி யாஷினியின் வலது கையில் நல்ல பாம்பு ஒன்று இரண்டு முறை தீண்டியது. வலியால் அலறிய அவரை, குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

முதலில் திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் யாஷினி கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயர சம்பவம் குறித்து எண்ணூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தகவலறிந்து வந்த திருவொற்றியூர் தீயணைப்புத் துறையினர் வீட்டுக்குள் பதுங்கியிருந்த அந்த நல்ல பாம்பினைப் பாதுகாப்பாகப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.