“விஜய் – சங்கீதா விவகாரத்தில் வெடித்த சர்ச்சை… நெட்டிசன்களுக்கு திரிஷா கொடுத்த மறைமுக பதிலடி…!”

Spread the love

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் குடும்ப விவகாரங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரு பதிவுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தனது பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடிய கையோடு, தன்னைப்பற்றிப் பரவி வரும் வதந்திகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஸ்டோரிகளை அவர் பகிர்ந்துள்ளார்.

முதல் பதிவில், “இந்த வயதில் தேவையில்லாமல் டிராமா செய்வது அசிங்கமானது; சென்று நாலு காசு சம்பாதித்து மன நிம்மதியைத் தேடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்-திரிஷா காதல் மற்றும் சங்கீதாவின் திருமணம் குறித்துக் காலவரிசைக்கு மாறான தகவல்களைக் கூறியிருந்தார். ‘கில்லி’ படத்திற்கு முன்பே விஜய்க்கு திருமணமாகிவிட்டது என்பதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், திரிஷாவின் இந்தப் பதிவு குட்டி பத்மினிக்கான ‘நோஸ் கட்’ பதிலடி என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனது இரண்டாவது பதிவில், “ஒரு காலத்தில் நாம் எதற்காகப் பிரார்த்தனை செய்தோமோ, அதே வாழ்க்கை இப்போது கிடைத்து அதில் மகிழ்ச்சியாக இருப்பது மிகப்பெரிய பாக்கியம்” எனக் குறிப்பிட்டுள்ளார். தன்னைச் சுற்றி எத்தனை சர்ச்சைகளும் வதந்திகளும் வந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் கூலாகப் பதிலடி கொடுத்துள்ள திரிஷாவின் இந்தப் பதிவுகள் தற்போது சோசியல் மீடியாவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

Swetha

Recent Posts

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

3 minutes ago

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

39 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

47 minutes ago