எனக்கு ரொம்ப பிடிக்கும்… என்னுடைய தேனிலவையும்… திருமணம் குறித்து நடிகை திரிஷா போட்ட பதிவு…!!

By Soundarya on ஐப்பசி 10, 2025

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. 42 வயதிலும் அதே இளமையோடு தமிழ் சினிமாவை தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் கட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் த்ரிஷாவுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்த நிலையில் சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை த்ரிஷா விரைவில் கரம் பிடிக்க உள்ளதாகவும், இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை திரிஷா இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், என்னுடையாய் வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய தேனிலவையும் அவர்களே திட்டமிட்டு கொடுப்பார்கள் என்று காத்திருக்கிறேன் என்று திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.