கேரள மாநிலத்தை சேர்ந்த மேரிவர்கிஸ்(65) என்பவர் தமிழக சமூக நலத்துறையில் இணை இயக்குனராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கொளத்தூரில் எனக்கு சொந்தமாக 2500 சதுர அடி காலி நிலம் உள்ளது. அதன் மதிப்பு 1 1/2 கோடி ரூபாய். சிலர் போலியான ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை அபகரித்துள்ளனர்.
அதனை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கொளத்தூரைச் சேர்ந்த சீனிவாசன், மணலியைச் சேர்ந்த இளஞ்செழியன் ஆகியோர் நிலத்தை மோசடி செய்தது தெரியவந்தது. சீனிவாசனுக்கு சொந்தமாக தியேட்டர் உள்ளது. இந்த வழக்கில் தாசில்தார் மற்றும் பத்திரப்பதிவு அதிகாரி ஆகிய இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
