திருமண நாளன்று விடுப்பு எடுத்த ஐ.டி ஊழியர்… மறுநாளே ஷாக் கொடுத்த மேலாளர்…. புலம்பிய வாலிபருக்கு ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 10, 2025

Spread the love

ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐ.டி நிறுவனங்களின் திடீர் முடிவால் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பதிவிட்டதாவது, நான் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தபோது எனது மேலாளர் வீட்டிலேயே இருக்குமாறு கூறினார். என்னவென்று கேட்டபோது தான் அந்த நிறுவனம் என்னை பணிநீக்கம் செய்தது தெரியவந்தது.

எனது திருமண நாள் அன்று என்னை பணி நீக்கம் செய்துள்ளனர். அன்று விடுப்பில் இருந்ததால் மேலாளர் என்னை தொடர்பு கொள்ளாமல் மறுநாள் விஷயத்தை கூறினார். அதே நிறுவனத்தில் வேறு ஒரு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளேன். இனி வரும் எந்த வாய்ப்புகளையும் நான் விடமாட்டேன் என ஊழியர் புலம்பியுள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.