திடீர் சந்திப்பு..! பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி…? செம அப்செட்டில் சீமான்…!!

By Soundarya on ஐப்பசி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.  அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளோடு சிறிய கட்சிகள் இணைவதற்கும் முனைப்பு காட்டி வருகிறது. எந்த கட்சியில் சேர்ந்தால் தங்களுக்கு லாபம் என்றும் சிறிய கட்சிகள் பார்த்து கூட்டணி சேர்த்து வருகின்றன. இந்த நிலையில் நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்,  தவெகவில் இணைவார் என்று தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில தான்  அவர் நயினார் நாகேந்திரனை சந்தித்துள்ளதால் அவர் பாஜகவில் இணைவாரா? என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால், மக்கள் பிரச்னைகளுக்காகவே முக்கிய தலைவர்களை சந்திப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கட்டாயம் எதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைவேன் என்றும் கூறியுள்ளார்.