தமிழக மக்களே… ஆடி மாத அம்மன் கோவில்களுக்கு இலவச டூர் போக ரெடியா?… உடனே அப்ளை பண்ணுங்க..!

By Nanthini on ஆனி 29, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் நடைபெற உள்ள அம்மன் கோவில்கள் பயணம் ஐந்து கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணங்கள் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தஞ்சாவூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து தொடங்க உள்ளது. இந்த ஆன்மீக பயணத்திட்டம் 60 முதல் 70 வயதிற்கு உட்பட்ட இந்து மதத்தை சேர்ந்த குடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றன. அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பதற்காக நான்கு விதமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணங்களுக்கு சிறப்பு பேருந்துகள், ஆன்மீக வழிகாட்டிகள், இலவச உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தரப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் tnhrce.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தங்களுக்குரிய மாவட்டத்தில் உள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.