தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று… அதிரடி காட்டும் முதல்வர்.. அனைத்து அதிகாரிகளுக்கும் பறந்த உத்தரவு..!

By Nanthini on ஆனி 29, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய ஆட்சிக்காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேலைகளை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது.

இப்படியான நிலையில் ஜூலை 3 ஆம் தேதியில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்று திமுகவினருக்கு ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார். எதிர்க்கட்சியினர் வீடுகளுக்கும் நேரில் சென்று பேச வேண்டும் என்று கூறிய அவர் ஐடி விங் மூலமாக தொகுதிக்கு ஒருவர் என 234 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு இவர்கள் மூலமாக 68,000 வாக்குச்சாவடிகள் உள்ள பூத் ஏஜெட்டுகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.