நான் அந்த மாதிரி எல்லாம் நடிக்க மாட்டேன், பண்ணா ஹீரோவா தான் பண்ணுவேன்.. டைரக்டரையே அலறவிட்ட பிரதீப் ரங்கநாதன்..!

By Nanthini on ஆனி 29, 2025

Spread the love

தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பட்டித் தொட்டி எல்லாம் ஹிட்டான படம் தான் கோமாளி. இந்த திரைப்படத்தின் மூலம் சைமா வழங்கும் அறிமுக இயக்குனர்களுக்கான விருதை வென்று தமிழ் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு தன்னுடைய கலை பயணத்தை தொடங்கியவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்காகவும் சைமா வழங்கும் அறிமுக நடிகருக்கான விருதை அவர் பெற்றார். இரண்டு திரைப்படங்கள்தான் இயக்கி இருக்கிறார் என்றாலும் இன்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள பிரதீப் ரங்கநாதன் இறுதியாக டிராகன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படம் 100 நாட்களை கடந்துள்ளது. இப்படியான நிலையில் டிராகன் படத்தின் வெற்றி விழா நடைபெற்ற போது பேசிய பிரதிப் ரங்கநாதன், ஓ மை கடவுளே படத்தில் தனக்கு கேரக்டர் ரோல் இருப்பதாக அஸ்வத் கூறியதாகவும் ஆனால் பண்ணா ஹீரோவாகத் தான் பண்ணுவேன் என்று கூறியதால் டிராகன் படத்தில் வாய்ப்பு கிடைத்ததாகவும் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.