“மீண்டும் ஒருமுறை உன்னோடு சொர்க்கத்தில்”… தன் காதல் கணவர் சூர்யாவுடன் அவுட்டிங் சென்ற ஜோதிகா.. இணையத்தை கலக்கும் வீடியோ..!

By Nanthini on ஆனி 29, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி என்றால் அது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகளை தான் பலரும் சொல்வார்கள். இவர்கள் இருவரும் சினிமாவில் இணைந்து நடிக்க தொடங்கியதில் இருந்து திருமண வாழ்க்கை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை என ரசிகர்களின் பேரன்பை பெற்ற சினிமாதம்பதியர்களில் இவர்களுக்கு எப்போதும் தனி இடம் உள்ளது. சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும் சினிமா பிரபலங்கள் என்ற காரணத்திற்காக அவர்களது திருமணம் அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை. முதலில் பெற்றோர்கள் சம்மதிக்காத நிலையில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு பல வருடங்கள் காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் கலந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

என் பொண்டாட்டிய லவ் பண்றியா?.. ஜோதிகாவுக்காக ஷூட்டிங் ஸ்பாட் சென்று  மிரட்டிய சூர்யா! | Here are The Unknown Throwback Incident about Suriya And  Jyothika - Tamil Filmibeat

   

திருமணத்திற்குப் பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜோதிகாவும் தொடர்ந்து தற்போது பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என நடித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு தியா மற்றும் தேவ என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தைகளின் படிப்புக்காகவும் ஜோதிகா தனது பெற்றோர்களுடன் இருக்க ஆசைப்படுகிறார் என்பதற்காகவும் மொத்த குடும்பமாக மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்கள்.

   

வைரலாகும் சூர்யா - ஜோதிகாவின் குடும்ப புகைப்படம்...

 

இப்படியான நிலையில் சூரியாவும் ஜோதிகாவும் அவுட்டிங் சென்றுள்ளனர். செம ஜாலியான மற்றும் ரொமான்டிக்கான அந்த அவுட்டிங் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜோதிகா தனது instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருவரும் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு அவர்கள் ஹெலிகாப்டரின் கடல் மேல் பயணம் செய்தது, தேங்காய் மரம் நட்டது, கடல் உணவுகளை சாப்பிட்டது என மகிழ்ச்சியான வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் இணையத்தில் வைரலாகி வர ஜோதிகா மீண்டும் ஒருமுறை உன்னோடு சொர்க்கத்தில் என கேப்சன் போட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Jyotika பதிவைப் பகிர்ந்துள்ளார் (@jyotika)