இன்றைய உலகில் திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். மருத்துவம், விளையாட்டு, படிப்பு, பெரிய பெரிய பதவிகளிலும் படித்து விட்டு வேலை பார்த்து வருகின்றனர். தங்களுக்கென்று மக்கள் மத்தியில் இருந்த பிம்பத்தை துடைத்து எறிந்து ஒரு தனி மரியாதையை உருவாக்கி வருகின்றனர்.
படிப்பில் மட்டுமின்றி பாடல், நடனம் என சினிமா துறையிலும் களமிறங்கி கால் பதித்து சாதித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலரால் இன்னும் திருநங்கைகள் கேலி செய்யப்பட்டு கொண்டிருப்பதும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. பாடல் என்றாலே சின்னக்குயில் சித்ரா இவரை நம் அனைவருக்கும் வந்துவிடும்.
இவரைப்போல நிறைய கலைஞர்கள் திரையுலகில் அற்புதமாக பாடி அசத்தி வருகின்றனர். SPB முதல் சித்ரா வரை பல பாடகர்கள் பாடிய பாடல் நம் காதுகளில் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் திருநங்கை ஒருவர் தனது பாடும் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார். அவரின் பெயர் ஐஸ்வர்யா.
தற்பொழுது இவர் பாடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து திருநங்கை ஐஸ்வர்யாவிடம் பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. இந்த பேட்டியில் அவர் ‘தனது சொந்த வாழ்க்கை குறித்த பல்வேறு விசயங்களையும், தான் கடந்து வந்த பாதை குறித்தும், பல்வேறு பாட்டுகளையும் பாடி அசத்தியுள்ளார்’. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது திறமையை மனதார பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…