மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் கைவரிசை காட்ட முயன்ற திருடன், போலீசாரிடம் இருந்து தப்பிக்க சினிமா பாணியில் குளத்தில் குதித்து 5 மணிநேரம் பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூர் அருகே ரேவா – இத்வாரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பயணித்த பெண்ணின் பையை பறிக்க முயன்ற 42 வயதான ஹர்விந்தர் சிங் என்ற சன்னி, ரயில்வே போலீசார் தன்னை துரத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, சிஹோரா சாலை அருகே இருந்த குளத்தில் குதித்து தலைமறைவானார்.
அதிகாலை 5.15 மணிக்கு குளத்தில் குதித்த நபரைத் தேடி தீயணைப்புத் துறையினரும், நீச்சல் வீரர்களும் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். பாசி படர்ந்து காணப்பட்ட அந்த குளத்தில் நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்காததால், அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். இருப்பினும் விடாமல் தேடியதில், சுமார் 5 மணிநேரத்திற்குப் பிறகு காலை 10.30 மணியளவில் அந்த நபர் உயிருடன் பிடிபட்டார். தண்ணீருக்குள் நீண்ட நேரம் மூச்சடக்கி அவர் எப்படி உயிர் பிழைத்தார் என்பது போலீசாருக்கே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில், தாமரை தண்டுகளைப் பயன்படுத்தி அவர் சுவாசித்தது தெரியவந்தது. தாமரை தண்டுகள் உட்புறம் குழாய் போன்ற துளைகளைக் கொண்டவை என்பதால், தண்ணீருக்கு அடியில் பதுங்கியிருந்தவாறே அந்த தண்டின் ஒரு முனையை வாயில் வைத்துக்கொண்டு, அதன் வழியாக மேலிருந்து காற்றை இழுத்து சுவாசித்துள்ளார். ஒரு நவீன ‘ஸ்நோர்க்கெலிங்’ (Snorkeling) கருவி போல தாமரை தண்டை பயன்படுத்தி போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்க அவர் மேற்கொண்ட இந்த வினோத முயற்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கைது செய்யப்பட்ட ஹர்விந்தர் சிங் மீது ஏற்கனவே பல மாநிலங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக 2018-ல் விசாகப்பட்டினத்தில் ஒரு ரயிலில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்களை திருடியதில் இவருக்குத் தொடர்பு உள்ளது. போலீசாரிடம் சிக்காமல் இருக்க மூன்று மாதத்திற்கு ஒருமுறை தனது திருட்டுப் பாதையை மாற்றும் வழக்கம் கொண்ட இவர், தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தொழில்நுட்பம் மற்றும் இயற்கையை தவறான வழிக்கு பயன்படுத்திய இந்த ‘தாமரைத் தண்டு’ திருடனின் கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…