“ஐயோ கொடுமையே…! விளையாடப் போன இடத்தில் காவு வாங்கிய எமன்… 3 வயது பிஞ்சு குழந்தை பரிதாப பலி…! நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!”

By Swetha on ஆடி 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தனபூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ரகுநாத் சேத் என்ற 3 வயது சிறுவன், அங்கிருந்த இடிபாடுகளுக்குள் மறைந்திருந்த விஷப் பாம்பினால் கடிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்த காட்சிகளை, அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த பிறகே குடும்பத்தினர் உறுதி செய்தனர். பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனை உடனடியாக சகல்தீஹா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இச்செய்தி கேட்ட குடும்பத்தினர் மீள முடியாத துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர்.

   

https://twitter.com/bharat_state/status/2079796258433069420/video/1

   

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்ட பாம்பு பிடிபவர் ஒருவர் அந்த விஷப் பாம்பைப் பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாகக் கொண்டு போய் விட்டார். உயிரிழந்த சிறுவனின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை காலை நவ்ரௌலி கங்கை நதிக்கரையில் நடைபெற்றன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.