சென்னை வளசரவாக்கம் கிருஷ்ணா தெருவை சேர்ந்த பிரதீப் குமார் என்பவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவது முறையாக கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர். இதனிடையே நேற்று காலை ராஜேஸ்வரி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப் போன ராஜேஸ்வரி உடனே மருத்துவர் களைத்த நிலையில் மருத்துவர்கள் விரைந்து வந்து குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தை இறந்து போனது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்ட தான் குழந்தை உயிரிழந்ததா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…