“அய்யோ பிறந்து இரண்டு நாள் கூட ஆகல”… தாய்ப்பால் குடிக்கும் போதே மூச்சு திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை… சென்னையில் சோகம்…!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

சென்னை வளசரவாக்கம் கிருஷ்ணா தெருவை சேர்ந்த பிரதீப் குமார் என்பவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவது முறையாக கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர். இதனிடையே நேற்று காலை ராஜேஸ்வரி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப் போன ராஜேஸ்வரி உடனே மருத்துவர் களைத்த நிலையில் மருத்துவர்கள் விரைந்து வந்து குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தை இறந்து போனது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்ட தான் குழந்தை உயிரிழந்ததா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.