அட கொடுமையே… 19 லட்சம் ரூபாய் நகைகளுக்காக… இந்திய மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்… கனடாவில் நடுங்க வைக்கும் கொடூரம்…!

By Swetha on புரட்டாதி 28, 2026

Spread the love

கனடாவில் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த வயதான இந்தியப் பெண்மணியிடம் இருந்து, சுமார் இந்திய மதிப்பில் ரூ 19.16 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது நடுங்கிக்கொண்டிருந்த அந்தப் மூதாட்டியை மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் இந்த அதிர்ச்சித் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த வீடியோவில், மூதாட்டியை வழிமறிக்கும் மர்ம நபர்கள், அவர் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் போதே அவரிடமிருந்த நகைப் பறிப்பில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது. இந்த நகைப் பறிப்பு சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

   

https://twitter.com/i/status/2103911485026283767

   

கனடாவில் வெளிநாட்டினர் மற்றும் இந்திய வம்சாவளியினரைக் குறிவைத்து நடத்தப்படும் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து இந்த நிகழ்வு மீண்டும் கவலையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கனடா காவல்துறையினர், வைரல் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.