சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த யுவனேஷ் (10), தேவதர்ஷன் (13) ஆகிய இரு சிறுவர்களும், பூஜா (13), குஷி (13) ஆகிய இரு சிறுமிகளும் நேற்று வழக்கம்போல் தங்கள் வீட்டின் அருகே ஒன்றாக விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்திலும் அப்பகுதியிலும் தீவிரமாகத் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் சிறுவர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் உடனே குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுவர்கள் சிலர் அருகிலுள்ள குரோம்பேட்டை பெரிய ஏரிப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்ததாக அப்பகுதியினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, நேற்று இரவு முதல் இன்று காலை வரை காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் ஏரிப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தத் தேடுதலின் முடிவில், ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் உடல்களும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டன. உடல்களைக் கைப்பற்றிய போலீசார், அவற்றை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆழமான சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான…
தலைநகர் டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையில், பெண் வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தொடங்கப்பட்டுள்ள தனி கவுண்டர் சமூக…
தமிழகத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாவில்…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அகமதுபூர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், அப்பகுதி நகராட்சி அலுவலகத்தில்…
மதுரை மாநகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த 15 கவுன்சிலர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில்…
கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மற்றும் மங்களப் பொருட்கள் வெறும் ஜடப்பொருட்கள் அல்ல; அவை மனித மனங்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும், நேர்மறை…