“ஐயோ என் புள்ளை போச்சே”… திம்பம் மலைப்பாதையில் கதறித் துடித்த தாய் குரங்கு… கலங்கி நின்ற பயணிகள்… நெஞ்சை பிழியும் சோகம்…!

Spread the love

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதையில், அதிவேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரிய வகை லங்கூர் குரங்கு குட்டி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. விபத்து நடந்த இடத்தில், உயிரிழந்த தன் குட்டியின் உடலை விட்டுப் பிரிய முடியாமல், தாய் குரங்கு நீண்ட நேரம் தவித்தபடி நின்ற உருக்கமான காட்சி அப்பகுதி வழியே சென்ற பயணிகளைக் கண்கலங்கச் செய்தது. வன உயிரின பாதுகாப்பில் மனிதர்கள் செலுத்த வேண்டிய கவனத்தையும் பொறுப்பையும் உணர்த்தும் விதமாக இந்த சோகச் சம்பவம் அமைந்துள்ளது.

திம்பம் மலைப்பாதை வழியாகப் பயணிக்கும் சிலர், சாலையோரம் நிற்கும் குரங்குகளுக்கு பிஸ்கட், மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களை வழங்குவதையே இந்த விபத்திற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. உணவிற்காக மனிதர்களை எதிர்பார்க்கத் தொடங்கும் வனவிலங்குகள், வாகனங்களை நோக்கிச் சாலைக்கு வருவதால் அடிக்கடி இது போன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. வன உயிரினங்களுக்கு உணவு வழங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றும், வனப்பகுதிச் சாலைகளில் வாகனங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் மெதுவாகவும் இயக்க வேண்டும் என்றும் வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பலியான லங்கூர் குரங்குகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கொடைக்கானல், கோத்தகிரி, மசினகுடி மற்றும் மந்தூர் போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மட்டுமே வாழக்கூடிய அரிய வகை உயிரினங்களாகும். பொதுவாக மனித நடமாட்டத்தை விரும்பாத இவை, மர உச்சிகளிலும் அடர்ந்த வனப்பகுதிகளிலும் வாழ்ந்து தாவரங்களின் இலைகள், பூக்கள் மற்றும் பழங்களை மட்டுமே உண்டு வாழும் இயல்பு கொண்டவை. ஆனால், அண்மைக் காலமாக உணவு மற்றும் தண்ணீரைத் தேடி இவை சாலையோரங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.

சாலையோரங்களில் தென்படும் இந்த அரிய வகை குரங்குகளைப் பார்த்துச் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுப்பதோடு, அவற்றிக்கு உணவும் அளிப்பதால் அதிகளவில் குரங்குகள் சாலையை முற்றுகையிடுகின்றன. இதுவே எதிர்பாராத விதமாக வாகனங்களில் அடிபட்டு அவை உயிரிழப்பதற்கு முதன்மை காரணமாக அமைகிறது. எனவே, வனப்பகுதி வழியே செல்லும் பயணிகள் எக்காரணம் கொண்டும் வனவிலங்குகளுக்கு மனித உணவுகளை வழங்கக் கூடாது என வனத்துறையினர் தொடர்ந்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

பயமா? …வயித்துப் பசிக்கு முன்னாடி அந்த மரண பயமெல்லாம்… ஒண்ணுமே இல்லை சார்… 44-வது மாடியில் உயிரைப் பணயம் வைக்கும் தொழிலாளி…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தெலங்கானாவில் உள்ள பன்மாடி கட்டடங்களின் 44-வது மாடியில் நின்று ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளைத் துப்புரவு…

7 minutes ago

அதிர்ச்சி… ஏழை ஆதிவாசிகளுக்கு மருத்துவம் பார்த்த… டாக்டர் சிறையில் அடைக்கப்பட்ட பரபரப்பு பின்னணி…!

ஒடிசாவில் ஆதிவாசி மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கி வந்த டாக்டர் ரேண்டல் செகுவேரா, அப்பகுதியில் நடைபெறும் பாக்சைட் சுரங்க எதிர்ப்புக்…

16 minutes ago

“குழந்தைகளை பார்க்கணும்”… கதறும் தாய்மார்கள்… கணவர்கள் சிறை கைதிகளா?… கிம்மின் பகீர் பிளான்… பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?..!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியாவில் கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவையான அத்தியாவசியப்…

30 minutes ago

“எனக்கா எண்ட் கார்டு?”… அதிர்ந்த உலகம்… வடகொரியாவில் அடுத்த அதிபர் யார்?… வதந்திகளை தவிடுபொடியாக்கிய கிம் ஜாங் உன்…!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவருக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கப்…

37 minutes ago

BREAKING: அடுத்த அதிர்ச்சி… சற்றுமுன் பத்மஸ்ரீ புகழ் செஃப் தாமு காலமானார்…. கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்….!

புகழ்பெற்ற சமையல் கலைஞரும், தமிழ் சின்னத்திரையின் முன்னணி பிரபலமுமான 'செஃப்' தாமு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். பல்வேறு தொலைக்காட்சி…

45 minutes ago

புதிய ட்விஸ்ட்..! செஞ்சி சிறுமி மாயம்… சிக்கிய முக்கிய க்ளூ… வசமாக சிக்கிய டவுசர் கும்பல்… நடுநடுங்க வைக்கும் திடுக் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கு தீவிரமடைந்துள்ளது. தொடக்கக்…

47 minutes ago