ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியாவில் கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதால், நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காகத் தனது நாட்டுத் தொழிலாளர்களை சீனா போன்ற நட்பு நாடுகளுக்கு வடகொரியா அனுப்பி வைக்கிறது. சமீபத்தில் ஒரே மாதத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை ஆடை உற்பத்தி மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் ஆலைகளில் பணிபுரிவதற்காக வடகொரிய அரசு சீனாவுக்கு அனுப்பியுள்ளது.
முன்பெல்லாம் திருமணமாகாத இளம் பெண்களே இத்தகைய வெளிநாட்டு வேலைகளுக்குப் பெரும்பாலும் அனுப்பப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது, சுமார் 40 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களைக் குறிவைத்து இந்தத் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு செய்யப்படும் பெண்கள், தங்கள் கணவர் மற்றும் பச்சிளம் குழந்தைகளை வடகொரியாவிலேயே விட்டுவிட்டு, சுமார் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சீனாவில் தங்கி கட்டாயப் பணியாற்ற வேண்டும் என்ற கடுமையான விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகாத பெண்கள் வெளிநாடு சென்றால் அங்கிருந்து தப்பித்து பிற நாடுகளுக்குச் சென்றுவிட வாய்ப்புள்ளது; ஆனால், திருமணமான பெண்களின் குடும்பத்தினர் வடகொரியாவில் இருக்கும்போது, குடும்பப் பாசத்தாலும் பாதுகாப்புக் கவலையாலும் அவர்கள் தப்பிச் செல்லாமல் பணி முடிந்து கட்டாயம் நாடு திரும்புவார்கள் என்ற காரணத்தினாலேயே கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தை பிணையக் கைதிகளாக வைத்து பெண்களை இவ்வாறு பணிக்கு அனுப்புவது அவர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான கிராக்கி மிக்க நிலத்தை, கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குச் கொண்டு…
சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்ட இல்லத்தில், முதல்வர் விஜய்க்கான முகாம் அலுவலகம் மட்டுமே தயார் செய்யப்பட்டு வருவதாகத் தனியார் இதழ்…
லித்துவேனியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி கரீஷா , தனது தோழியுடன் இந்தியாவில் நீண்ட சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். தாங்கள்…
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெறும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி கூட்டம், தமிழக அரசியல்…
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தெலங்கானாவில் உள்ள பன்மாடி கட்டடங்களின் 44-வது மாடியில் நின்று ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளைத் துப்புரவு…
ஒடிசாவில் ஆதிவாசி மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கி வந்த டாக்டர் ரேண்டல் செகுவேரா, அப்பகுதியில் நடைபெறும் பாக்சைட் சுரங்க எதிர்ப்புக்…