“சொத்தை என் பெயரில் எழுதி கொடு!”… ரகசிய காதலி கொடுத்த டார்ச்சர்… ஜிம் மாஸ்டர் எடுத்த விபரீத முடிவு… பெங்களூருவை உலுக்கிய தற்கொலை…!!!

Spread the love

பெங்களூரு நெலமங்கலா பகுதியைச் சேர்ந்த 28 வயது பாடி பில்டர் திலீப், மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர். இவர் நடத்தி வந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்த 42 வயதான யோகிதா என்ற திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்த இவர்களின் உறவில், யோகிதா அடிக்கடி திலீப்பிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஏற்கனவே காவல் நிலையம் வரை சென்றுள்ளது. போலீசாரின் பேச்சுவார்த்தையில், யோகிதாவின் கணவர் முன்னிலையில் இனி இருவரும் சந்திக்கக் கூடாது என்று எழுதி வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும், யோகிதா தொடர்ந்து திலீப்பைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு டார்ச்சர் செய்ததோடு, திலீப்பின் வீட்டைத் தன் பெயரில் எழுதித் தருமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் திலீப் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்த திலீப், யாரிடமும் பேசாமல் தனது அறைக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திலீப்பின் சகோதரிக்கு போன் செய்த யோகிதா, திலீப் மின்விசிறியில் துணியைக் கட்டித் தற்கொலைக்கு முயல்வதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பதறிய குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது, திலீப் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

தனது தற்கொலையை யோகிதாவுக்கு வீடியோ கால் மூலம் காட்டியபடியே திலீப் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது. திலீப்பின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பணம் மற்றும் சொத்துக்காக மிரட்டிய யோகிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திலீப்பின் செல்போனை ஆய்வு செய்து வரும் போலீசார், இந்த விபரீத முடிவு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago