Connect with us

அவங்க எத பண்ணாலும் நாங்களும் அத பண்ணுவோம்.. விஜய் டிவியின் பம்பர் ஹிட் சோ-வை காப்பி அடிச்ச சன் டிவி..!!

CINEMA

அவங்க எத பண்ணாலும் நாங்களும் அத பண்ணுவோம்.. விஜய் டிவியின் பம்பர் ஹிட் சோ-வை காப்பி அடிச்ச சன் டிவி..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் இப்போது டாப் குக்கு டூப் குக்கு என்கின்ற பெயரில் புது ஷோ ஒன்று அறிமுகமாக உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று பல ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அதிலும் சூப்பர் சிங்கர் பிக்பாஸ் குக் வித் கோமாளி டான்ஸ் ஜோடி டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை கூறிக் கொண்டே போகலாம்.

அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இந்த முறை 5-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த நான்கு சீசன்களிலும் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர்கள் இருந்தார்கள். ஆனால் இந்த முறை வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களம் இறங்கி இருக்கின்றார்.

   

 

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வைரலாகி வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது சன் டிவியில் புது குக்கிங் ஷோ ஒன்று விரைவில் வர உள்ளது. அதற்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி இருக்கின்றது. இதற்கு பெயர் டாப் குக் டூப் குக் என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் நடுவராக வெங்கடேஷ் பட் இருக்கின்றார். இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று வெளியானது. இதில் மோனிஷா, ஜிபி முத்து, தீபா, பரத் ஆகிய பலரும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பலரும் ஆர்வமுடன் இருந்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top