Categories: சினிமா

சியான் விக்ரம் முதல் கவின் வரை.. ஆகஸ்ட் 15 குறிவைக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள்..!

Spread the love

ஆகஸ்ட் 15-ஐ குறி வைத்து முன்னணி நடிகர்களான சீயான் விக்ரம், ஜெயம் ரவி, அருண் விஜய், கார்த்தி மற்றும் கவின் திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சினிமாவை பொறுத்தவரையில் விடுமுறை நாட்களில் தங்களது திரைப்படங்களை வெளியிடுவதை அனைத்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள். அப்படி விடுமுறை நாட்களில் வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பதற்கு திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும் மற்றும் கலெக்ஷனும் அதிகரிக்கும். இதன் மூலமாகத்தான் படத்தில் போட்ட படத்தை எடுக்க முடியும் என்பது தயாரிப்பாளர்களின் கணக்கு.

ஆனால் ஒரு விடுமுறை நாட்களில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் வெளியானால் பரவாயில்லை. ஒட்டுமொத்தமாக நான்கைந்து திரைப்படங்கள் அதுவும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் என்ன செய்வது அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது தமிழ் சினிமாவில் நடைபெற இருக்கின்றது.

அதாவது வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியாது என கூறி புஷ்பா 2 திரைப்படம் விலகி விட்டது. இதனால் அந்த இடத்திற்கு போட்டி போட்டு தொடர்ந்து பல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றது.

ஏற்கனவே அந்த தேதியில் தான் பாலாவின் வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறியிருந்தார்கள். பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வணங்கான். இந்த திரைப்படத்தை அந்த தேதியில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதை தொடர்ந்து ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தையும் அந்த தேதியில் தான் ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இது போதாது என்று ஏற்கனவே பலமுறை ரிலீஸ் டேட் அறிவித்து பின்னர் அந்த தேதியை தள்ளி வைத்துக்கொண்டே வந்த சீயான் விக்ரமின் தங்கலான் திரைப்படத்தையும் அந்த தேதியில் தான் ரிலீஸ் செய்யலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படி இருக்க மற்றொருபுறம் நடிகர் கார்த்திக் மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் திரைப்படமும், நெல்சன் தயாரிப்பில் நடிகர் கவின் நடித்திருக்கும் பிளடி பக்கர் திரைப்படமும் அந்த தேதியில் தான் ரிலீஸ் செய்யும் முடிவு எடுத்திருக்கிறார்களாம். புஷ்பா 2 திரைப்படம் ஒதுங்கிய நிலையில் ஆளுகளுக்கு அந்த தேதியை குறிவைத்து படத்தை வெளியிட தீவிர முயற்சியில் இறங்கி வருகிறார்கள், இதில் எந்த திரைப்படம் திரைக்கு வரப்போகின்றது எந்த படங்கள் பின்வாங்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mahalakshmi

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

31 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

33 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

38 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

40 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

52 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

55 minutes ago