Categories: சினிமா

மாஸ்டர் சொன்ன ஐடியா எனக்கு புடிச்சது.. தயவுசெஞ்சு இதை மட்டும் பண்ணுங்க.. மக்களுக்கு எஸ்ஜே சூர்யா விடுத்த கோரிக்கை..!

Spread the love

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் விவசாயிக்கு மாற்றம் அறக்கட்டளை மூலமாக விவசாய டிராக்டர் சாவினை வழங்கும் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் எஸ் ஜே சூர்யாவும் கலந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருவார் ராகவா லாரன்ஸ். இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியிருக்கின்றார். தனது நடிப்பால் பிரபலமானாரோ இல்லையோ தான் பிறருக்கு செய்யும் உதவியின் மூலமாக பெரும் புகழையும் அடைந்திருக்கின்றார். கடந்த மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் என்கின்ற அறக்கட்டளை தொடங்கிய இவர் அதில் பலரும் இணைந்து உதவி செய்யலாம் என்று கூறியிருந்தார்.

இந்த அறகட்டளையில் கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷா, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து இருக்கிறார்கள். அதன் மூலம் பலருக்கும் உதவி கிடைக்கும் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த சேவை மூலமாக முதற்கட்டமாக 10 கிராமங்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பத்துக்கு பெயர் பட்ட விவசாய டிராக்டர்களை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியிருந்தார்.

தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யாவுடன் காஞ்சிபுரம் அடுத்த தேனாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் மூத்த விவசாயி முனுசாமி மற்றும் தெய்வானை குடும்பத்திற்கு டிராக்டர் ஒன்றை வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். கிராமத்திற்கு வருகை புரிந்த இவர்களை கிராம மக்கள் அனைவரும் மேளதாளத்துடன் பூத்தூவி வரவேற்றார்கள்.

மூத்த விவசாயிக்கு சாவி அளித்து பத்து நாட்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டு விட்டு மீதமுள்ள 20 நாட்களில் ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவி புரிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். மேலும் மாற்றத்தை நோக்கி செயல்பட்டு வரும் நமது குழுவினருக்கு நன்றி தெரிவித்ததாகவும், தன்னால் இயன்ற உதவிகளை நேரடியாக அவர்களுக்கு செய்துவிட்டு மாற்றம் அமைப்பின் மூலமாக பல உதவிகளை செய்ய இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது “இந்த அறக்கட்டளையில் நான் சேர்ந்தேன். அதன் பிறகு ராகவா லாரன்ஸ் மாஸ்டர் இடம் நான் கூறினேன். நான் உங்களுக்கு தேவையான பணத்தை அக்கவுண்டில் போட்டு விடுகிறேன். அதை எடுத்து நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை, மாற்றம் அறக்கட்டளைக்கு எந்த ஒரு அக்கவுண்டும் கிடையாது.

எந்த ஒரு உதவியாக இருந்தாலும் நீங்களே உங்கள் கைகளால் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ராகவா லாரன்ஸை பொறுத்தவரையில் நான் உதவி செய்கிறேன், என்னை பார்த்து ஒருவர் உதவி செய்ய வருவார். அவரை பார்த்து நான்கு பேர் உதவி செய்ய வருவார்கள். அதுதான் வேண்டும். இப்போது நான் உதவி செய்ய வந்திருக்கின்றேன் இதை பார்த்து யாராவது ஒருவர் உதவி செய்ய வந்தால் அதுவே மிகப்பெரிய மாற்றம். இதுதான் ராகவா லாரன்ஸின் ஆசை. இதை அனைவரும் நிறைவேற்றுங்கள்” என்று அவர் பகிர்ந்திருந்தார்.

Mahalakshmi

Recent Posts

ஐயோ கொடுமையே… காதலியுடன் லுடோ விளையாடிய… பாஜக இளைஞர் தலைவர் படுகொலை… கணவனுடன் சேர்ந்து மனைவி செய்த அதிர்ச்சி காரியம்… பதறவைக்கும் சம்பவம்…!

சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…

3 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… போதையில் மனைவியைக் குத்திக்கொன்றுவிட்டு… கால் தவறி விழுந்துவிட்டார் என்று நாடகமாடிய கணவன்… கொளத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…

8 minutes ago

ஐயோ பாவம்… யாரென்று தெரியாமலேயே போன உயிர்… மின்தாக்குதல் விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளி பலியான சோகம்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

மதுநாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்திக் நகர், அஞ்சையா நகர் பகுதியில் மின்தாக்குதலுக்குள்ளாகி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

13 minutes ago

அட கடவுளே… வகுப்பறையே இடிந்து விழுந்த கோரம்… தலைமேல் கவிழ்ந்த கூரையால்… அரசுப் பள்ளியில் அலறியடித்த குழந்தைகள்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து…

22 minutes ago

ஐயோ… தப்பு பண்ணா தப்பிக்க முடியாது… முகமூடி நபரின் வெறித்தனமான கத்திக்குத்து… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…

28 minutes ago

“அண்ணே… 16 வருசமா உன்னை எங்கெங்கோ தேடுனேன்…” ராக்கி கட்டச் சென்ற தங்கைக்கு… சாலையோரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…

49 minutes ago