திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சளி டானிக் குடித்த ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சின்ன புதூரை சேர்ந்த சின்ன பாண்டி (30) பானுப்ரியா தம்பதிக்கு பிரனீத் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த ஜூன் 26 ஆம் தேதி அந்த குழந்தைக்கு சளி பிடித்த நிலையில் டானிக் கொடுத்து தூங்க வைத்துள்ளனர்.
மறுநாள் காலை குழந்தைக்கு திடீரென உடல்நிலை மோசமான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. டானிக் குடித்ததன் காரணமாகத்தான் குழந்தை இறந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டும் நிலையில் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
