கடலூர் மாவட்டம் ஜேடர்பாளையம் நாகம்மாள் பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் சம்பத் (28). இவர் உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியன் தமிழ்நாடு காவல் சிறப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்லையில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கின் போது மீட்பு பணிக்கு சென்று இருந்த சமயத்தில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர் ஆக பணியாற்றிய நெல்லையை சேர்ந்த 28 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக இவர்கள் பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. பின்னர் சம்பத் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பியதும் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
இப்படியான நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சம்பத் அந்த பெண்ணை கடலூருக்கு அழைத்து வந்துள்ளார். பிறகு கடலூரில் உள்ள விடுதியில் நான்கு நாட்கள் தங்க வைத்து ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகின்றது. பிறகு அந்த இளம் பெண் சம்பத்தை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்யக் கூடிய போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணை ஆபாசமாகவும் திட்டி உள்ளார். இது தொடர்பாக அந்த இளம் பெண் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
