தமிழகத்தில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியாகி உள்ளது. கல்வித் தகுதி: 10-ம் வகுப்பில் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 4 ஆகும். திறனறி தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சிறப்பு கால முறை ஊதியம் ரூ.11,100/- ரூ.35,100. இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
