நாமக்கல் மாவட்டம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியை ஆன அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாமக்கல் தில்லைபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54). இவர் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வரும் நிலையில் சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய இவ்வாறு ஆறு மாதங்களுக்கு முன்பு இடமாறுதல் பெற்ற திருச்சி சென்றார்.
இவருடைய மனைவி பிரமிளா(50) ஆண்டாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இப்படியான நிலையில் நாமக்கல் அருகே வகுரம் பட்டியில் அதிகாலை 5 மணி அளவில் கணவன் மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
