#image_title
ஆடி மாதம் பெண்களால் பல விசேஷ தினங்கள் கொண்டாடப்படுகிறது. அதில் ஒன்றுதான் வரலட்சுமி விரதம். இந்த தினத்தன்று பெண்கள் விசேஷ பூஜை செய்து மகாலட்சுமியை வழிபடுவார்கள். மகாலட்சுமி விரத பூஜையை மேற்கொள்ளும் போது உடனடியாக திருமண யோகம் கைகூடும். திருமணம் ஆன பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். அன்றைய தினம் லட்சுமியை வழிபட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் ஆகியவை உண்டாகும்.
16 வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகாலட்சுமியை நினைத்து இருக்க வேண்டிய முக்கியமான வழிபாடு வரலட்சுமி விரதம் என்பதாகும். மங்களத்தையும் மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை திருமணம் கைகூட வேண்டிய கன்னிப் பெண்கள், திருமணம் ஆன சுமங்கலி பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி அன்று நிகழ்கிறது. இன்னாளில் பூராடம் நட்சத்திரமும், மூல நட்சத்திரமும் இணைந்து வருகிறது. பெருமாளுக்கு உரிய ஏகாதசியும் வருகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த வரலட்சுமி விரதம் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறக்கூடிய ஏற்ற நாளாக இந்த வருடம் அமைந்துள்ளது.
வீட்டில் வரலட்சுமி விரதத்திற்காக சிலை வைத்து வணங்குபவர்கள் முதலில் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்க வேண்டும். அப்படி மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம் 15 ஆகஸ்ட் அன்று மாலை 6:00 மணி முதல் எட்டு மணி வரை ஆகும். இல்லையேல் 16 ஆகஸ்ட் காலை 6:00 மணி முதல் 7. 20 மணிக்குள் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்து வந்து விட வேண்டும். அதற்குப் பிறகு பூஜை செய்ய 16 ஆகஸ்ட் காலை 9:00 மணி முதல் 10.20 மணி வரை மட்டுமே உகந்த நேரம் ஆகும். அதுபோல மாலையில் பூஜை செய்ய விரும்புபவர்கள் ஆறு மணிக்கு மேல் பூஜையை தொடங்கலாம்.
சிலர் வீட்டிலே பெரிதாக குத்துவிளக்கில் சேலை கட்டி, முகம் வைத்து, நகைகள் பூட்டி மகாலட்சுமி சிலையை செய்வார்கள். அப்படி செய்ய இயலாதவர்கள் ஒரு சிறிய கலசத்தில் சுத்தமான தண்ணீர் நிரப்பி, அதற்குள் பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கப்பட்டை, மஞ்சள் போன்றவற்றை நிரப்பி அதற்கு மேலே தேங்காய் மற்றும் மாவிலை வைத்து அலங்கரித்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதை மகாலட்சுமியாக நினைத்து வழிபடலாம். கலசம் மஹாலக்ஷ்மியின் அம்சம் ஆகும். ‘அம்மா மகாலட்சுமி தாயே, எங்கள் வீட்டிற்கு வாமா, எங்கள் குடும்பத்தாரை ஆசிர்வாதம் செய்யம்மா என்று கூறி மனதார வழிபட வேண்டும்.
அன்றைய தினம் பெண்கள் அதிகாலையில் குளித்துவிட்டு அன்றைய தினம் விரதம் கடைபிடிக்க வேண்டும். வாழைப்பழம், பால், பழங்கள், துளசி தீர்த்தம் போன்றவற்றை குடித்து விரதம் மேற்கொண்டு சாயங்காலம் பூஜை முடிந்த பின்பு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். அன்றைய தினம் தாலிக்கயிறை மாற்ற விரும்புபவர்கள் தாலி கயிரையும் மாற்றிக் கொள்ளலாம். தங்களால் முடிந்த அளவு 3, 5 அல்லது 11 சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட்டு துணி, கண்ணாடி வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் போன்றவற்றை தானமாக வழங்குவது வரலட்சுமி தினத்தன்று சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.
NR புரா காவல்துறை, சிக்கமகளூரு மாவட்டம் முத்தினக்கொப்பா கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக…
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் இளைய மகள் ஹேமலதா,…
முண்டக்கயத்தைச் சுற்றியுள்ள வாரிக்காணி சந்திப்பில், சாலைக் பாதசாரி கடவையில் சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது அதிவேகமாக வந்த இருசக்கர…
தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், காவல்துறையினரும்…
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், கடந்த சில நாட்களாகவே பொதுநிகழ்வுகளிலோ அல்லது கட்சித் திட்டங்களிலோ அதிகம்…
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…