“எங்க பொண்ணு உயிரோட தான் இருக்கா”… 3 நாட்களில் வரப்போகும் நல்ல செய்தி?…. ஆலம்பூண்டி கிராமத்தையே உலுக்கிய 7 வயது சிறுமியின் மாயன்…. தாய் அளித்த பகீர் வாக்குமூலம்….!

Spread the love

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் இளைய மகள் ஹேமலதா, இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த அக்டோபர் 11-ம் தேதி தனது பிறந்தநாளை உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு தாயுடன் வீட்டின் உள்ளே தூங்கச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் காலை பார்த்தபோது சிறுமி மாயமாகியிருந்தது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுற்றியுள்ள வீடுகளிலும் ஊர் முழுவதிலும் தேடியும் சிறுமி கிடைக்காததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுமியின் காணாமல் போன விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டக் காவல்துறை உயர் எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியது. நான்கு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. டிரோன்கள், மோப்ப நாய்கள் மற்றும் மீனவர்களின் உதவியுடன் கிராமத்தைச் சுற்றியுள்ள கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும், கிராம வீடுகளிலும் முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களிடமும் காவல்துறையினர் விரிவான விசாரணையை மேற்கொண்டனர்.

தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழலில், வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறி போராட்டங்கள் வலுத்தன. இதையடுத்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி தமிழகக் காவல்துறை உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.ஜவஹர் தலைமையிலான குழுவினர் ஆலம்பூண்டி கிராமத்திற்கு நேரில் சென்று, பெற்றோர் உட்பட ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நபர்களிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்திற்குரிய நபர்களைச் சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்தபோதிலும், வழக்கிற்குத் தேவையான முக்கியத் தடயங்கள் உடனடியாகச் சிக்கவில்லை.

இந்தச் சம்பவம் தமிழக அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பவே, வழக்கு தமிழக அளவில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றது. இதனால் ஏற்பட்ட தீவிர அழுத்தத்தின் காரணமாக, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளும் விசாரணைக் களத்தில் களமிறக்கப்பட்டு, தேடுதல் பணி மேலும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

மகள் காணாமல் போய் நாட்கள் பல கடந்த நிலையிலும், பெற்றோர் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கோயிலில் பூ போட்டுப் பார்த்ததில் நல்ல சகுனம் வந்திருப்பதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நல்ல செய்தி கிடைக்கும் என்று காவல்துறையினர் தங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி-யின் இந்த தீவிர விசாரணையின் மூலம் சிறுமி ஹேமலதா விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் முழு கிராமமும் உறைந்து போய் உள்ளது.

Nanthini

Recent Posts

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

4 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

5 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

10 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

17 minutes ago

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

26 minutes ago

அடகடவுளே..! இடித்து தள்ளிவிட்டு எஸ்கேப்!… உயிருக்கு போராடும் இளைஞர்… நிற்காமல் பறந்த ஃபார்ச்சூனர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…

33 minutes ago