விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா இருக்கும் நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் வெளியேறினர். போட்டி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் பினாலே டாஸ்க்கும் நிறைவடைந்து வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டு விட்டார். ரயான் பைனலுக்குள் நுழைந்துள்ளார்.
இந்த நிலையில் முந்தைய சீசன்களை போலவே ஷோவின் இறுதிக்கட்டத்தில் முன்பு எலிமிமினெட் ஆன போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அதாவது சாச்சனா, தர்ஷாகுப்தா ,அர்னவ், சிவகுமார், ரவீந்தர் சந்திரசேகர், ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் தான் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். இவர்கள் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களுடன் மோத உள்ள நிலையில், ஒருவேளை வைல்டு கார்டு போட்டியாளர்கள் வெற்றிபெற்றால் இருவர் ரீபிலேஸ் செய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவருக்கும் இந்த வாரம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரோல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் பாட்டு ஒலிக்கும் போது அனைவரும் தங்கள் டாஸ்கை செய்ய வேண்டும். ஒவ்வொருவராக ஆடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியான புரோமோவில் ரயான் பவித்ராவிடம் சாச்சனா செய்யும் காரியம் குறித்து சொல்கிறார். அதாவது சாப்பிட்ட தட்டை கூட கழுவ மாட்டேங்குது. இதுக்கு தான் வீட்ல யாரவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வாங்கன்னு சொன்னேன் என்று கோபத்தோடயு பேசியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…