நடிகர் ராம்சரண், sj சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன் படக் குழுவினர் அதிகமாக ஈடுபட்ட நிலையில் இயக்குனர் ஷங்கரும் தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த மொழிகளில் அடுத்தடுத்த பிரமோஷன் ஈடுபட்டார். அந்த பேட்டியில் தன்னுடைய முந்தைய படத்தின் அனுபவங்கள், கேம் சேஞ்சர் படத்தின் எக்ஸ்பீரியன்ஸ் ஆகியவற்றை பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னதாக அர்ஜுன் லீட் கேரக்டரில் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற ஜென்டில்மேன் படம் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதாவது இந்த படத்தில் நடிக்க தான் முதலில் சரத்குமாரை தான் தேர்வு செய்ததாகவும் அவருடைய டேட்ஸ் மற்றொரு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்ததால் அவரிடம் இதுகுறித்து பேசியுள்ளார் ஷங்கர்.
ஆனால் அவர்கள் தாங்கள் கமலஹாசனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாகவும் அவரை வைத்து இந்த கதைக்களத்தில் படத்தை இயக்க கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் முயற்சி செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில் தான் கமலஹாசனிடம் கதை சொன்னதாகவும் சங்கர் கூறியுள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிக்க கமலஹாசன் மறுத்துவிட்டாராம்.
அந்த நேரத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இதே போன்ற வேடத்தில் கமலஹாசன் நடித்திருந்ததால் இந்த கேரக்டர் ரிப்பீட் செய்யும் விதமாக இருக்கும் என்ற இந்த படத்தில் கமலஹாசன் நடிக்க மறுத்தாராம். இதனை தொடர்ந்து தான் நடிகர் அர்ஜுனை இந்த கேரக்டரில் நடிக்க வைத்து ஜென்டில்மேன் படத்தை எடுத்ததாகவும் சங்கர் கூறியுள்ளார்
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…