விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 10 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

#image_title
இதில் மொத்தம் பத்து போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றியடையும் போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார். தற்போது டிக்கெட் டூ பினாலே தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள். இதில் முதல் போட்டியாளராக ரயான் டிக்கெட் டூ பினாலேவில் நுழைந்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது.

#image_title
‘கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா மற்றும் ராணவ் ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்ற உள்ளனர். இப்படியான நிலையில் கடந்த வாரம் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

#image_title
விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டிற்குள்நுழைந்து டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்குள் நுழைந்த போட்டியாளர் ரயானை அழைத்து அதற்கான கார்டை வழங்கினார். இந்நிலையில் இந்த வார நாமினேஷன் தொடங்கியுள்ளது. அதில் மொத்த போட்டியாளர்களும் சேர்ந்து சௌந்தர்யாவை டார்கெட் செய்கிறார்கள். PR டீம் இருப்பதால் தான் இவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறாய் என்று கூறுகிறார்க். இதனால் சௌந்தர்யா வாழ்க்கையில எப்படி தான் முன்னேற என்று கண்ணீர் விட்டு அழுகிறார்.
#Day92 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/eC7z6aev6J
— Vijay Television (@vijaytelevision) January 6, 2025