savv

சொன்னதை செய்து காட்டிய முத்து… டீலர்களிடம் மாட்டிக்கொண்ட மனோஜ்… சிறகடிக்க ஆசையில் இன்று…

By Meena on ஜனவரி 6, 2025

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் அண்ணாமலையை ஷோரூம் ஓனராக மாற்ற வேண்டும் என்று முத்து கூறுகிறார். அப்போதுதான் மனோஜ் மறுபடியும் ஏமாறாமல் பிசினஸில் மேலே போக முடியும் என்று கூறுகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

   

இன்றைய எபிசோடில் சுருதியும் ரவியும் ஷோரூம்க்கு வந்து முத்து வர சொன்னா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் வீட்டிலிருந்து அண்ணாமலை, விஜயா, மீனா அனைவரையும் கூட்டிக்கொண்டு முத்து ஷோரூம்க்கு வருகிறார். அண்ணாமலை எவ்வளவோ வேண்டாமென்று சொல்லியும் முத்து கேட்கவில்லை. முத்துவின் நண்பர் மாலையெல்லாம் வாங்கிட்டு வந்தார்.

   

அப்போது முத்து எல்லாரும் வாங்க வேலை பார்க்கிறவங்க எல்லாம் வாங்க என்று கூப்பிட்டு இனி உங்களுடைய ஓனர் அப்பாதான் மனோஜ் இங்க உங்கள மாதிரி ஒரு வேலைக்காரன் தான் என்று கூறுகிறார். அண்ணாமலைக்கும் விஜயாவுக்கும் மாலை போட்டு அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார். இதற்கிடையில் மனோஜ்க்கு பொருட்கள் தரும் சந்தோஷ் என்பவரும் சப்டீலர்களும் அங்கு வந்து விடுகின்றனர். இவர்கள் அனைவரும் மனோஜிடம் நாங்கள் பணம் அனுப்பிட்டோம் இன்னும் எங்களுக்கு ஏன் பொருள் வரலைன்னு மனோஜிடம் சண்டை போடுகின்றனர்.

 

சந்தோஷ் சார் வந்து என்னதான் நடக்குது என்ன பிரச்சனை என்று கேட்கும்போது மனோஜ் முழித்துக் கொண்டிருக்கிறார். சந்தோஷ் சப்டீலர்களிடம் ஜப்பானிலிருந்து பொருள் வர தாமதமாகிவிட்டது. நான் ரெண்டு நாள் அனுப்புறேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு மனோஜை திட்டுகிறார். பிறகு முத்து நடந்த உண்மைகளை எல்லாம் கூறுகிறார். பணத்தை கோட்டை விட்டுட்டான் சார் என்று சொல்கிறார். உடனே சந்தோஷ் மனோஜையும் ரோகிணியும் திட்டுகிறார். நாங்கள் எல்லாம் பிசினஸ்க்கு வந்து 10 வருஷம் கழிச்சு தான் நாங்க வீடு வாங்கினோம் அதுவும் சாதாரண பிளாட் தான். நீங்க பிசினஸ் ஆரம்பிச்சு இப்பதான் கொஞ்சம் வளர ஸ்டேஜ் வர்றதுக்குள்ள உங்களுக்கு எதுக்கு மூணு கோடி ரூபாய்க்கு பங்களா பாக்கணும் என்று கூறிவிட்டு அண்ணாமலை முத்து இவர்களுக்காக தான் உங்கள விட்டுட்டு போறேன் இல்லனா டீலர்ஷிப்பை கேன்சல் பண்ணியிருப்பேன் என்று கோபப்பட்டு விட்டு சென்று விடுகிறார்.

அடுத்ததாக வீட்டில் வந்தவுடன் முத்துவை விஜயா கண்டபடி திட்டுகிறார். இதுதான் கிடைச்ச சான்ஸ்னு மனோஜை போட்டு அவமானப்படுத்திட்டு இருக்கியா என்று கேட்கிறார். உடனே மீனா அவர் ஒன்னும் அவமானப்படுத்த நினைக்கல வாழ்க்கைல முன்னேறனும்னு அவர் பாக்குறாரு. இன்னைக்கு மாமாவும் அவரும் இல்லனா சந்தோஷ் சார் டீலர்ஷிப்பை கேன்சல் பண்ணிட்டு போயிருப்பாரு என்று கூறுகிறார். அதற்கு சப்போர்ட்டாக சுருதியும் பேசுகிறார். அண்ணாமலை சரி விடுங்க என்று எல்லாரையும் அனுப்பி வைக்கிறார். அப்போது விஜயா வந்து மீனாவிடம் கத்துகிறார். என்னடி ரொம்ப ஓவரா பேசுற என்கிறார். நான் ஒண்ணுமே பேசல தான் பதில் தான் சொன்னேன் அத்தை என்று கூறுகிறார்.

உடனே அந்த பக்கம் வந்து ரோகிணியிடம் கத்துகிறார் விஜயா. உன்னால மரியாதையே போச்சு என்கிட்ட உண்மையை மறைத்து ப்படி என்னை அவமானப்பட வச்சிட்டியே என்று கூறுகிறார். அடுத்ததாக ரூமில் மனோஜ் ரோகினி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகினி நமது வீட்டில் மரியாதை இல்லை ஷோரூம்மிலும் மரியாதை இல்லாம போயிருச்சு. நம்ம பணத்தை தூக்கிட்டு ஓடினவனை கண்டுபிடிச்சு அந்த பணத்தை வாங்கி அங்கிள் கிட்ட கொடுக்கணும் அப்பதான் நமக்கு மரியாதை கிடைக்கும் என்று கூறுகிறார். மனோஜ் அது எப்படி அப்பாட்ட கொடுக்க முடியும் ரோகிணி சப்டீலருக்கு அத வச்சு தான் பொருள் வாங்கி கொடுக்கணும் என்று கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.