தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை அமலாபால். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதாமரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்தார். அடுத்ததாக நடித்த மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில் இவர் ஏஎல் விஜயை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

பின்னர் விவாகரத்து பெற்ற நிலையில் பால் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூன் 11ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளனர்.

கணவர் மற்றும் குழந்தை என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அமலா பால் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட முதலாம் ஆண்டு திருமண நாளை கடலுக்கு நடுவில் கொண்டாடிய புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்தார்.

இப்படியான நிலையில் அமலாபால் தனது மகனுக்கு வேஷ்டி சட்டை அணிவித்து அவருடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
