தமிழ்நாட்டில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து சவரனுக்கு ரூ.1,680 வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.13,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்ததைத் தொடர்ந்து, இன்று மேலும் ஒரு மிகப்பெரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது நுகர்வோரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய அதிரடி விலை குறைவின்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.210 குறைந்து ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,680 வரை சரிந்து, தற்போது ரூ.1,06,800 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ.2,000 வரை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
