திமுக தகவல் தொழில்நுட்ப அணி தமிழக முதலமைச்சரும் ‘தமிழக வெற்றிக் கழக’த்தின் தலைவருமான விஜய்யை நோக்கி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. சட்டமன்றம் என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம் என்றும், அங்கு மிக மலிவான முறையில் நடந்து கொண்டு சட்டமன்றத்தின் கண்ணியத்தையே விஜய் குழிதோண்டிப் புதைத்திருக்கிறார் என்றும் திமுக சாடியுள்ளது. எதிர்க்கட்சிகளை நக்கல் செய்வதாக நினைத்துக்கொண்டு அடுத்தவர்களின் குடும்பத்தைப் பற்றிப் பேசும் அவரை ‘இன்ஸ்டா அரசன்’ மற்றும் ‘சோஃபா மாடல் முதலமைச்சர்’ எனக் குறிப்பிட்டு திமுக விங் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
அடுத்தவர்களின் குடும்பத்தைப் பற்றிக் குட்டிக்கதை சொல்லும் விஜய்யின் சொந்தத் தனிமனித வாழ்க்கை மற்றும் குடும்பப் பின்னணி குறித்து திமுக ஐடி விங் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. “உங்கள் குடும்பம் எங்கே? அவர்களை ஏன் நடுத்தெருவில் கைவிட்டீர்கள்?” என்று நேரடியாகக் கேட்டுள்ளதோடு, அவரது சொந்தப் பிள்ளைகளின் நண்பர்கள் “உங்க அப்பா எங்கடா?” என்று கேட்டால் அந்தப் பிள்ளைகள் என்ன பதில் சொல்வார்கள் என என்றாவது யோசித்ததுண்டா என்றும் சாடியுள்ளது. மேலும், அவரது மனைவியே நடிகையோடு தொடர்ப்பு என நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்கும் அளவுக்குக் கேவலமான நிலையில் தனிமனித வாழ்க்கை இருக்கும்போது, எந்த முகத்தோடு சட்டமன்றத்தில் நின்று அடுத்தவர்கள் குடும்பத்தைப் பேசுகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேடைக்கு மேடை ‘தனிமனித ஒழுக்கம்’ என்று ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்திவிட்டு, முதலில் தனது சொந்தக் குடும்பத்தின் வண்டவாளங்களைச் சரி செய்யுமாறு விஜய்க்கு திமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. சொந்தக் குடும்பத்தைக் கவனிக்காமல், இணையதளத்தில் தங்களை விமர்சிக்கும் ‘Virtual Abusers’களுக்குப் புரியும் மொழியிலேயே தாங்கள் பதிலளிப்பதாகக் கூறியுள்ளது. இத்தகைய அசிங்கமான பின்னணியை வைத்துக்கொண்டு சட்டமன்றத்தில் வந்து வாய் கிழியப் பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று திமுக ஐடி விங் தனது பதிவில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
