நடிகர் சூர்யா தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா, இன்று தன்னுடைய 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். சினிமாவில் பல வருடங்களாக கஷ்டப்பட்டு சாதித்து ஒரு முன்னணி இடத்தை பிடித்திருக்கின்றார். இன்று தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகின்றார்.
நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் பல விமர்சனங்களை சந்தித்தார். நடனம் வரவில்லை, வசனம் பேச தெரியவில்லை, ரொமான்ஸ் வரவில்லை என்று ஏகப்பட்ட விமர்சனங்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு தற்போது ஒரு முன்னணி நடிகராக வளர்ந்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த திரைப்படம் என்றால் அது நந்தா தான். பாலா இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் இவருக்கு மிகச்சிறந்த வரவேற்பை கொடுத்தது. அதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
அந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு முன்னணி நடிகராக வலம் வர தொடங்கிய சூர்யா தொடர்ந்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். திரையில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக இருக்கும் இவர் அகரம் என்ற பவுண்டேஷனை தொடங்கி அதன் ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றார்.
இவர் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இடைத்தொடர்ந்து கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்த முடித்து இருக்கின்றார். இந்த படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கும் இவர் கமிட்டாகி இருக்கின்றார்.
இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன்படி இவருக்கு மொத்தம் 200 கோடியில் இருந்து 300 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகின்றது. ஒரு படத்திற்கு மட்டும் 20 இருந்து 25 கோடி வரை சம்பளமாக பெறுகின்றார். மேலும் இவரிடம் ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரியஸ், 80 லட்சம் மதிப்பிற்கும் AUDI Q7, 60 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் எம் கிளாஸ் உள்ளிட்ட பலவகையான சொகுசு கார்கள் இருக்கின்றது. மேலும் தற்போது மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கின்றார். அந்த வீட்டின் மதிப்பு 70 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகின்றது.