ஒரு காலகட்டத்தில் ஃபேமிலி ஆடியன்ஸை தன்வசம் வைத்திருந்தவர் இயக்குனர் ராசு மதுரவன். இவர் பூமகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இயக்கத்தில் ரிலீசான மாயாண்டி குடும்பத்தார் படம் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராசு மதுரவன் உயிரிழந்தார். அவர் இறந்து 11 ஆண்டுகள் ஆழநிலையில் ராசு மதுரவனின் மனைவி பவானி தனது குடும்ப சூழ்நிலை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் 12 ஆம் வகுப்பு, இளைய மகள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர்.
பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவதால் பவானி ஒரு தனியார் பள்ளியில் கிண்டார் கார்டன் டீச்சராக வேலை பார்க்கிறார். அவர் வாங்கும் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் குடும்ப செலவுக்கு சரியாகிவிடுகிறது. இதனால் தனது மகள்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கடன் வாங்க வேண்டி உள்ளது. சினிமா துறையை சேர்ந்தவர்கள் உதவி செய்யவில்லை. யாராவது மகள்களின் கல்விக்காக உதவி செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என கண்ணீருடன் பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் ராசு மதுரவனின் படத்தில் இதுவரை நடித்ததே இல்லை. ஆனால் பவானியில் பேட்டியை பார்த்த சிவகார்த்திகேயன் அவராக முன் வந்து 97 ஆயிரம் ஸ்கூல் பீஸ் கட்டியுள்ளார். அவருக்கு ராசு மதுரவனின் மனைவி நன்றி கூறியுள்ளார். பல நடிகர்களும் இயக்குனர்களும் கண்டுகொள்ளாத நிலையில் சிவகார்த்திகேயன் செய்த உதவி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.