தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2009-ஆம் ஆண்டு அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தின் மூலம் வெள்ளி திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பிறகு மண்டேலா, தர்ம பிரபு, ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா, லக்கி மேன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். நேற்று யோகி பாபு தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சினிமாவில் கஷ்டப்பட்டு வளர்ந்து தற்போது கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளார். யோகி பாபு நடிப்பில் அடுத்ததாக போட், கஜானா, கோட், கங்குவா, அந்தகன் மெடிக்கல் மிராக்கிள் உள்ளிட்ட பாடங்கள் ரிலீசாக உள்ளது.
ஓய்வே எடுக்காமல் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். நேற்று யோகி பாபு பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்கினார்.
பின்னர் கோவில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து யோகி பாபு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் வெளியே வந்த பக்தர்கள் பொதுமக்களுடன் செல்பி எடுத்து கொண்டார். இதனை தொடர்ந்து பேட்டரி காரில் சென்ற யோகி பாபு தூய்மை பணியாளர்களை பார்த்ததும் பேட்டரி காரை நிறுத்திவிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அன்பளிப்பு வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram