FLASH: 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாள்.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத தகுதியுடைய மாணவர்கள், இந்தத் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலமாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய இன்று இறுதி நாளாகும்.

மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது சேவை மையங்கள் வாயிலாக இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள, தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியைப் பார்வையிடலாம். இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கத் தவறுபவர்கள், தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.