பெரும் படையுடன் தவெக-வில் இணையும் யுவராஜா..! மாஸ் காட்டும் விஜய்.. ஆட்டம் காணும் தமாகா..!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அதன் பொதுச்செயலாளர் யுவராஜா, விரைவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு தமாகா தலைமை மீது அவர் கடுமையான அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனைத் தொடர்பு கொள்ள அவர் முயன்றும், உரிய பதில் கிடைக்காததால் அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.

இந்தக் கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தமாகா செயற்குழு கூட்டத்தையும் யுவராஜா முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளார். தற்பொழுது தமாகா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ள அவர், ஓரிரு நாட்களில் தனது ஆதரவாளர்கள் மற்றும் பெரும் படையுடன் தவெக கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார் எனக் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை நோக்கி தவெக தயாராகி வரும் வேளையில், இந்த நகர்வு அக்கட்சிக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.