“இது எங்க இறுதிச்சடங்குக்கு வச்சிக்கோங்க” Phonepe இல் பணத்தை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட குடும்பம்… நடந்தது என்ன.? ஆந்திராவில் அதிர்ச்சி..!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேசத்தில் தங்களது சொந்த இறுதிச் சடங்கிற்கான செலவுத் தொகையை உறவினர்களுக்கு போன்பே செயலி மூலம் அனுப்பிவிட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியரான மதுசூதன் (65) என்பவர், சமூகத்திலும் மனதளவிலும் தாங்கள் மிகவும் பலவீனமடைந்து விட்டதாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். பின்னர் அவர் தனது மனைவி ரத்னாவளி (50) மற்றும் மகன் சாய்சுக்ருத் (26) ஆகியோருடன் இணைந்து இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, தங்களது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு உறவினர்களுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் பணத்தை முன்கூட்டியே அனுப்பியுள்ளார். மேலும், அவர் தனது கடிதத்தில் தங்களுக்குச் சொந்தமான சொத்தின் ஒரு பகுதியை ரெட் கிராஸ் அமைப்பிற்குத் தானமாக வழங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விசித்திரமான மற்றும் சோகமான தற்கொலை சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.