காத்திருந்தவர்களுக்கு ஓர் நற்செய்தி.. வெளியானது TNPSC குரூப் 4 அறிவிப்பு.. இத்தனை ஆயிரம் காலி இடங்களா..?

By John

Updated on:

அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற வெறி கொண்டு போட்டித் தேர்வுகளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் அடுத்த வருடம் வரக்கூடிய தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி தற்போது அதற்குரிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் – 4 தேர்வுக்கான அறிவிப்பில் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

   
TNPSC 1
TNPSC 1

அசத்தும் ஸ்டைல்..! இது ஆட்டோவா..? இல்ல ஸ்கூட்டியா..? வந்தாச்சு டூ இன் ஒன் வாகனம்.. அசத்தும் ஹீரோ நிறுவனம்

இந்த குரூப் – 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதே சமயம் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மார்ச் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை என 3 நாள்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குரூப் – 4 தேர்வானது ஜூன் 9 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் தேர்வு தொடர்பான முழு விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 15லட்சத்துக்கும் அதிமானோர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது.

Exam
Exam

எம்.ஜி.ஆரை ஒரே வார்த்தையில் குளிர வைத்த அண்ணா.. அப்படி என்ன சொல்லியிருப்பாரு?

தமிழில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் கட்டாயம் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர்த்து பொதுவான கேள்விகளாக 75 கேள்விகள் இருக்கும், இவை தவிர்த்து ஆப்டிடியூட் எனப்படும் கேள்விகள் 25 இடம்பெறும் , மொத்தமாக 200 கேள்விகள் இடம்பெறும். அதற்கு மொத்தமாக 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மொத்தம் 3 மணி நேரம் நடைபெற உள்ள இந்த தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுக்கு மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்கும் பட்டதாரிகள், மாணவர்களுக்கு இந்தச் செய்தி அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. என்ன உடனே அப்ளிகேஷன் போட கிளம்பிட்டீங்களா?

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த LINK-ஐ கிளிக் செய்து TNPSC குரூப் 4 தொடர்பாப்பான அறிவுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

https://tnpsc.gov.in/Document/english/1_2024-Eng.pdf

author avatar