BREAKING: புயல் வார்னிங்… தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு வந்த அலர்ட்…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

வங்க கடலில் உருவாகுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனிடையே செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10:00 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சென்னை, குமரி, நெல்லை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே சமயம் நவம்பர் 26ஆம் தேதி புயல் உருவான பிறகு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.