BREAKING: “குஷியோ குஷி”…. பெண்களுக்கு ‘ஒரு சவரன் தங்கம்’.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on புரட்டாதி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கட்சியினர் அனைவரும் தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகிறார்கள்.

இப்படியான நிலையில் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த உள்ளது. தற்போது தங்கத்தின் விலை கிராமுக்கு 10,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்நிலையில் செயல்பாட்டில் உள்ள 4 திருமண நிதி உதவி திட்டங்களில் 22 கேரட் ஒரு சவரன் தங்கம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 45 கோடி மதிப்பீட்டில் 5460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.