அதிமுகவில் அடுத்த பரபரப்பு… EPS இடத்தில் இனி இவர்தானா?… யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்…!

By Nanthini on புரட்டாதி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார்.

ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.  இதனால் அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் இபிஎஸ்ஸுக்கு எதிராக செங்கோட்டையன் கழக குரல் எழுப்பியதற்கு பின்னால் எஸ்பி வேலுமணி இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இதற்கு முக்கிய காரணம் கொங்குவில் இபிஎஸ்ஸுக்கு இணையாக செல்வாக்கு படைத்தவர் வேலுமணி. இதனால் இனி “நானே முதல்வர்” என்று அவர் காய்களை நகர்த்த ஆரம்பித்து உள்ளாராம். குறிப்பாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கும் இவர் என் பங்கு முதன்மையானது என கூறப்படுகிறது.