“நாய் நன்றியுள்ளது என்பது இதுதானா….!” உரிமையாளரின் குடும்பத்தை காப்பாற்றிய நாய்…. செல்ல பிராணியின் வைரல் வீடியோ …..!

By Srimathi on புரட்டாதி 10, 2025

Spread the love

நாய்கள் வெறும் செல்லப்பிராணிகள் மட்டுமல்ல, உரிமையாளர்களின் உயிரைக் காப்பாற்ற எதையும் செய்யக்கூடிய குடும்பத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது.

பெருவின் ஹுவாரை சேர்ந்தவர் கார்லோஸ் ஆல்பர்டோ மெசியாஸ் ஜராத்தே. இவரது வீட்டில் அடையாளம் தெரியாத ஒரு நபர் எரியும் டைனமைட் குச்சியை வீசி உள்ளார். ஆனால் ஆல்பர்ட் வீட்டில் வசித்து வரும் செல்ல நாய் முன்ச்சீஸ், அதன் ஆபத்தை உணர்ந்து தன் உயிரை பொருட்படுத்தாமல் எரியும் டைனமைட்டை தன் வாயால் மென்று அணைத்தது. இந்த முழு சம்பவமும் சிசிடிவி கேமராவில் பதிவாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

   

ஆல்பர்டோ குடும்பத்தில் மொத்தம் 10 பேர் மற்றும் 3 செல்ல நாய்கள் உள்ள நிலையில், இவர் அனைவரையும் முன்ச்சீஸ் செல்ல நாய்,தனது உயிரைபொருட்படுத்தாமல் காப்பாற்றியது. மேலும் டைனமைட் சுடரால் அதன் தொண்டை மோசமாக பாதிக்கப்பட்டு, தற்பொழுது அந்த நாயால் குறைக்க இயலவில்லை. போலீசார் சம்பவ இடத்தை ஆராய்ச்சி செய்து, இந்த குற்ற செயலில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். இந்த வீடியோ வலை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.